பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்

எமது வலயக்கல்விப்பணிப்பாளரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையினடிப்படையில் தகவல்தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் எமது வலயத்திலுள்ள உயர்தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்

இக்கலந்துரையாடலில் எமது வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் மற்றும் தகவல்தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மைய முகாமையாளர் மற்றும் போதனாசிரியர்கள் கலந்துகொண்டார்கள்

முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள். 05,06,07/04/2024

முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள்.05,06,07/04/2024

05,06,07.04.2024 ஆகிய மூன்று நாட்கள் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள் நடைபெற்றன. 38 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று (08.04.2024) முதலாவது வினைத்திறன் தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 37 ஆசிரியர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். வலயக் கல்விப் பணிப்பாளர் லெனின் அறிவழகன் அவர்களுக்கும், CRC முகாமையாளர், போதானாசிரியர்கள் ஆகியோருக்கும் உளப்பூர்வமான நன்றி.

முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள். 16,17,18/04/2024

முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள்.16,17,18/04/2024

எமது வவுனியா வடக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் 16, 17, 18.04.2024 ஆகிய மூன்று நாட்கள் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள் நடைபெற்றன. 36 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று (18.04.2024) முதலாவது வினைத்திறன் தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 27 ஆசிரியர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். வலயக் கல்விப் பணிப்பாளர் லெனின் அறிவழகன் அவர்களுக்கும், CRC முகாமையாளர் மற்றும் போதானாசிரியர்கள்ஆகியோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.

AL 2023 (2024) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணினி பயிற்சி

AL 2023 (2024) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணினி பயிற்சி

க.பொ.த.உயர்தரம் 2023(2024) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணினிப்பயிற்சி நெறிகள் எமது வவுனியா வடக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் 07.02.2024 அன்று ஆரம்பமாகும்

Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு

எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு வலயக்கல்வி அலுவலகத்தால் 25.10.2023 மற்றும் 26.10.2023 ஆகிய தினங்களில் நடைபெற்றது

வவுனியா வடக்கு வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்

Certificate Awarding Ceremony 2023 3rd batch

எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் Certificate in Cloud Applications பாடநெறியை பூர்த்தி செய்த மூன்றாம் அணி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023

புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (11.08.2023) நடைபெற்ற இந்நிகழ்வில் எமது வலய கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளரும் நெடுங்கேணி கோட்டக்கல்விப்பணிப்பாளருமான திரு வாசுதீசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

.இந்நிகழ்வில் எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளரும் வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகருமான திரு.சிவராஜா அவர்களும் எமது ITDLH முகாமையாளர் திரு.சுதர்சன் அவர்களும், புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்..

Certificate awarding Ceremony ITDLH Vavuniya North

மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2022ம் ஆண்டு எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் கணினிக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023

புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளரும் வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகருமான திரு.சிவராஜா அவர்களும் எமது ITDLH முகாமையாளர் திரு.சுதர்சன் அவர்களும், புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்..